Skip to content

என்னண்டை வந்திடாயோ

Published: at 08:23 PM

என்னண்டை வந்திடாயோ
பின்பற்றி வந்திடாயோ
உன்னை நீ வெறுத்து சிலுவையை எடுத்து
பின்பற்றி வந்திடாயோ – 2

  1. உலகை ஆதாயம் செய்தும்
    ஜீவனோ நஷ்டப்பட்டால் மரணம்
    வரும் வேளை மறுமைக்குள்
    செல்கையில் என்ன லாபம் உனக்கு – 2

  2. கல்வாரி காட்சி கண்டும் கல்மனம்
    உருகலையோ ஐங்காயங்கள்
    தனில் அடைக்கலம் அளித்திட
    அழைப்போரை பார்த்திடாயோ? – 2