காரிருள் வேளையில் கடுங்குளிர்
நேரத்தில் ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே
உம் மாதயவே தயவே
-
விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவே -
விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனிதரில் பிரியம் மலர்ந்தது
உந்தன் மாதயவால் தயவால்