Chorus/Intro
தனிமையில் தவிப்பதாய்
தரணியே சொன்ன போதும்
என்னிடம் ஒன்றும் இல்லை
என்று சொல்லக் கேட்டேனே
நான் நம்பும் என் தேவன்
என்னைக் கைவிடாரே
நன்றி ஐயா உம் ஆசிருக்காய்
Verse
தூங்கும் போதும் காத்துக்கொண்டீர்
எந்தன் அரணானிரே
குறைவில்லாமல் தேற்றி
என்னை போஷித்தீரே
நல்லோர் குடும்பத்தை தந்தீர்
அன்பை காட்டீனீரே(OR உம் அன்பினாலே)
நன்றி ஐயா உம் ஆசிருக்காய்
Bridge
நானோ செல்வந்தன் அல்ல
நீரோ அறிவீரல்லோ
யாவும் இல்லாத போதும்
எனக்கு நீர் உண்டல்லோ
பார் காணாவிடினும்
என் தேவை நீரே
நன்றி ஐயா உம் ஆசிருக்காய்
Original Song Credits
Composers & Songwriters: James Easter, Russell Lee Easter and Edward Franklin Easter
Tamil Translation: Ben Subendran