Skip to content

திருப்பணி தொடங்கிட

Published: at 08:23 PM

திருப்பணி தொடங்கிட
திருவடிவே உந்தன்
திரு வரம் வேண்டுமையா
உந்தன் திருவடி பணிந்து
திருப்புகழ் இசைக்க
அருளிட வேண்டுமையா

  1. அமைதியைத் தேடி அலைந்திடப் போதும்
    அவதியில் மூழ்கி கலங்கிய போதுன்னை
    அண்டிட மறந்தேன் ஆதரிப்பாயே
    அரவணைத்திடுவாயே

  2. உறவுகள் தருவதும் நீயன்றோ அதை
    உடைத்திடும் கரமும் உனதன்றோ காட்சி
    கனவாய் மாறிய போதுன்னை கண்டிட
    மறந்த நான் பாவியன்றோ

  3. எதிர்கால கவலைகள் வருத்திட்டப் போதும்
    ஏக்கம் நெஞ்சை அழுத்திட்டப் போதுமேன்
    அன்பு குறைந்ததே எந்தையே நீயுமேன்
    குறை மறைந்தேற்றிடுவாய்