-
பரிசுத்தமான பரமனே என்னை
பாத்திரம்(ன்) ஆக்கிடுமே
பரம தரிசனம் தாருமே தேவா
பரிசுத்தமாக்கிடுமேகர்த்தருக்குப் பரிசுத்தம் கருத்துடன் நெற்றியிலே
பதித்திட உதவி செய்யும் பரமனே சுத்தமாக்கும் -
அந்தரங்க வாழ்க்கையில் பரிசுத்தம் காண
அடிமைக்கு உதவி செய்யும்
இரகசியப் பாவங்கள் வெறுத்திட எனக்கு
இரங்கிடும் இந்நேரமே -
பொது வாழ்வில் என்னைப் பரிசுத்தமாக
காத்திட உதவி செய்யும்
நாள்தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த
பரிசுத்தம் தந்திடுமே -
தூசியை உதறிவிட்டெழுந்திட எனக்கு
தூயனே துணை செய்குவீர்
வல்லமை தரித்து வாழ்ந்திட இன்று
உம் ஆவி தந்திடுமே
பரிசுத்தமான பரமனே என்னை
Published: at 08:23 PM