இணையில்லா தேவனே
இணைத்தீரே இன்னாளில்
இரு கரம் பற்றிக் கொள்ளுமே
இயேசையப்பா…
-
தாயின் கருவினில் கண்டவரே
தலை நரைக்கும் வரை காப்பவரே
தரிசனம் இவர் வாழ்வில் தினம் காண
உம் ஆசீர் என்றும் வேண்டுகின்றோம் -
முதல் அற்புதம் திருமணத்தில்
குறைவேதும் இல்லாமல் காத்தவரே
குறைவிலும் இவர்கள் நிறைவாக
உம் அன்பில் என்றும் வளரச் செய்யும் -
செடியோடு கொடியாக இணைந்திட வேண்டும்
கனி பல கொடுத்து மகிழ்த்திட வேண்டும்
உறவுகள் கூடி வர வேண்டும்
உம் அன்பு என்றும் பெருக வேண்டும்