-
இம்மாலையும் எந்நேரமும்
என்னொடிரும் மைந்தா
யார் துணைதான் நீங்கினாலும்
என் கரம் தாங்கிடும்அல்லும் பகல் உம் செட்டையின்
கீழ் இளைப்பாறுவேன்
ஆயுள் முழுதும் உம் நாமம்
பாடி நான் பூரிப்பேன்என் ஜீவனை அல்ல உந்தன்
அன்பை நான் போற்றுவேன்
என் ஜீவ நாட்கள் செல்வையில்
என் கைவிடாதிரும் -
உம் துணையால் பகைவரை
நான் என்றும் ஜெயிப்பேன்
உம் கைகளின் ஆசியினால்
நோயையும் வெல்லுவேன்உன் அருளால் சாத்தான் மோசம்
என்னைத் தாக்கிடாதே
வாழ்நாளும் உந்தன் செயலை
நான் எண்ணி வாழ்த்துவேன்நம்பினோரைக் கைவிடாத
தேவனும் நீரல்லோ
நம்பினேன் உம்மை என்றுமே
என் கைவிடாதிரும் -
இருள் சூழ்ந்த இவ்வுலகில்
ஒளியாய் வீசுமே
கிருபையின் நாட்களை நான்
ஏற்றிட தாருமேநான் செய்திடும் தொழிலிலும்
உம் தயை வேண்டும்
உம்மை விட்டு செல்வையிலும்
என்னை கூட்டிச் சேரும்நான் பாவிதான் என்றறிவீர்
ஆயினும் சேர்த்திடும்
எல்லாம் வல்ல தேவன் நீரே
என் கைவிடாதிரும்
இம்மாலையும் எந்நேரமும்
Published: at 08:23 PM