இருள் சூழும் வேளை
இதயம் தளர்ந்தால்
உம் கரம் பிடிக்கின்றதே
இனி என்ன வாழ்வு
எனச் சோரும்போது
உம் அருள் பொழிகின்றதே
-
நீர் தந்த வாழ்வில்
நிம்மதி இல்லை
நினைவுகள் எல்லாம்
நலமாகவில்லை
நிந்தனை நடுவிலும்
நாம் வாழ்கிறோமே
நிமலா உம் ஆசி
தர வேண்டுமே -
உம் தேவைக்காக
எம்மை படைத்தாய்
உம் சேவை செய்ய
ஏவி நின்றாய்
எம் தேவையெனோ
மறந்து விட்டீரே
எம் ஆசை யாவும்
அழிந்ததுவே -
மூள்முடி தாங்கி
சிலுவையின் மீது
மூள் ஆணி குத்தி
மரித்தனையோ
மரித்தாலும் நாதா
எமக்காக உயிர்த்த
உம் அன்புக் கேதும்
இணையாகுமோ -
வருங்காலமெல்லாம்
வளமாக வேண்டும்
வாதை நோய் இன்றி
நாம் வாழ வேண்டும்
எது வந்த போதும்
உம் நாமம் மறவா
இதயம் எமக்கு
தர வேண்டுமே