Skip to content

உம் சமூகத்தில்

Published: at 08:23 PM

உம் சமூகத்தில் நான்
முழங்காலில் நிற்கின்றேன்
என்னால் முடியாதையா
என்னை தாங்கிக்கொள்ளுமே

உம் அன்பை அறிந்தும்
சுபாவம் மாறி நிற்கின்றேன்
என்னால் முடியாதையா
என்னை மீட்டுக்கொள்ளுமே

கண்டுகொள்ளும் பாவி என்னை
மறைவாக உமக்கு இங்கு ஒன்றுமில்லை
சோர்வுகள் பெலவீன நேரத்திலும்
உமக்கு சாட்சியாய் ஜீவிக்க ஏங்குகிறேன்