திருப்பணி தொடங்கிட
திருவடிவே உந்தன்
திரு வரம் வேண்டுமையா
உந்தன் திருவடி பணிந்து
திருப்புகழ் இசைக்க
அருளிட வேண்டுமையா
-
அமைதியைத் தேடி அலைந்திடப் போதும்
அவதியில் மூழ்கி கலங்கிய போதுன்னை
அண்டிட மறந்தேன் ஆதரிப்பாயே
அரவணைத்திடுவாயே -
உறவுகள் தருவதும் நீயன்றோ அதை
உடைத்திடும் கரமும் உனதன்றோ காட்சி
கனவாய் மாறிய போதுன்னை கண்டிட
மறந்த நான் பாவியன்றோ -
எதிர்கால கவலைகள் வருத்திட்டப் போதும்
ஏக்கம் நெஞ்சை அழுத்திட்டப் போதுமேன்
அன்பு குறைந்ததே எந்தையே நீயுமேன்
குறை மறைந்தேற்றிடுவாய்