Skip to content

தேவனே உந்தன் திரு சமூகம்

Published: at 08:23 PM

தேவனே உந்தன் திரு சமூகம்
என் முன்னே (என்னோடு)
என்றும் செல்லட்டுமே
ஆறுதல் எந்தன் வாழ்வினிலே
அன்பரே உந்தன் சமூகமே

  1. பாதை தெரியாத குருடனைப் போல்
    பேதை தடுமாறும் வேளையிலும்
    வழி காட்டி போதித்து நடத்திடும்
    உந்தன் சமூகம் போதுமையா

  2. சத்துரு சோதனை பெருகுவதால்
    சக்தி இழந்து தியங்குகையில்
    சத்துவம் தந்து என்னை தேற்றும்
    ஜெய வீரனாய் மாற்றும் சமூகமே

  3. பசி தாகத்தால் என் தேகமும்
    சோர்ந்து தளரும் வேளையிலும்
    வானும் மலையும் திறந்துமே
    பசி தாகம் தீர்க்கும் சமூகமே

  4. கண்ணீரின் பள்ளம் கடக்கையிலே
    கண்ணீரால் படுக்கை நனையும் போது
    கண்ணீரை நீரூற்றாய் மாற்றி என்றும்
    களி கூரப் பண்ணும் உம் சமூகமே

  5. மேக மீதினில் நீர் வரும் நாள்
    விண்ணிலே உம்மையும் சந்திப்பேனே
    உந்தனின் சாயலாய் என்னை மாற்றும்
    உந்தன் சமூகம் தாரும் ஐயா