வாரத்தில ஒரு மணி நேரம்
நாங்க கிறிஸ்தவங்க
மற்ற நேரத்தில
பேருலத்தான் கிறிஸ்தவங்க
தாத்தா தோமாசு (Thomas-u)
அப்பா ஆமோசு (Amos-u)
நானோ போவாசு (Boaz-u)
இன்னும் என்பாங்க..
-
அடிப்படையில் அன்பு அற்ற
மக்கள் (கூட்டம்) நாங்களே
ஆழமான சத்தியங்கள் பற்றி பேசுவோம்
ஐக்கியம் என்னும் தலைப்பிலே கூட்டங்கள் நடத்தி
சண்டை சச்சரவுகளுடனே முடிப்போம் - தாத்தா தோமாசு -
போட்டி போட்டு ஜெபிப்பதற்கு முந்தியடிப்போம்
தேவ வார்த்தையின் படி நடக்க தவறுவோம்
கால்வினிஸம், ஆர்மினிஸம் எல்லாம் கதைப்போம்
சண்டை சச்சரவுகளுடனே முடிப்போம் - தாத்தா தோமாசு -
தேவ ஈவுகளால் மற்றொருக்கு உதவிகள் செய்வோம்
கடைசியில credits எல்லாம் நாம பெறுவோம் (creditsல நாமதான் என்போம்)
மன்னிப்பின் மேன்மை குறித்து செய்தி எடுப்போம் (கேட்போம்)
அடுத்த நிமிஷம் மன்னிக்க முடியாது என்போம் - தாத்தா தோமாசு
(மன்னிப்பை மறந்து ஜீவிப்போம்) -
திருவிருந்து என்றால் அன்று முக்கியமாய்ச் (நிச்சயமாய்ச்) செல்வோம்
திருமறை படிப்புகளில் மறுரூபமாகுவோம்
(திருமறை படிப்பு என்றால் கள்ளம் அடிப்போம்)
பாரம்பரிய பரம்பரைகளாக வாழ்ந்திட்டு
பரிசுத்ததை நினைத்தபடி மரித்துவிடுவோம்